தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு..!!!


உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கலகெதர மினிகமுவவில் வசிப்பவர் ஆவர்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here