மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். துணிச்சலாக இருப்பீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நீண்ட நாள் மனதில் இருந்த கஷ்டத்தை போக்கிக் கொள்ள ஒரு போராட்டம் நடத்தி முடிப்பீர்கள். அந்த போராட்டம் உங்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தனதானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். மன நிம்மதி அடைவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வேலையில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டிலிருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்ப உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை நிலவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத வரவு இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். எதிர்கால சேமிப்பை துவங்குவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நேரத்தை சரியாக பயன்படுத்தி இந்த நாளை ஜெயித்து விடுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். உங்களுடைய வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். உங்களுக்கு தேவையான பொன் பொருளை இன்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கண்ணும் கருத்துமாக உங்களுடைய கடமைகளை முடிப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளையும் சரி செய்து கொடுப்பீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். சின்ன சின்ன தோல்விகளுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது. தொடர்ந்து போராடினால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்களது பேச்சை கேட்கவும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை இருக்கும். பெருமையான நாள். பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய நாள். பெயர் புகழ் அந்தஸ்துகூட கூடிய நாள். சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சொத்து சுகம் சேர்க்கை உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மனமகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மன அமைதியோடு இருப்பீர்கள். தேவையற்ற சந்தேகங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். வேலையிலும் வியாபாரத்திலும், நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நல்ல நண்பர்களின் உறவு நிறைய லாபத்தை பெற்று தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நல்லது கெட்டதை சரியாக புரிந்து கொள்வீர்கள். எந்த இடத்தில் பணிந்து போக வேண்டும், எந்த இடத்தில் தலை தூக்க வேண்டும் என்ற சூட்சமத்தை இன்று சரியாக கையாளுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
Tags:
Rasi Palan