இன்றைய ராசிபலன் - 07.06.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் எதிர்ப்புகள் வரும். உங்களால் ஒரு வேலையை உருப்படியாக செய்ய முடியாது. குறை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள். அதை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கடமையில் சரியாக இருங்கள். நிச்சயம் இறைவனின் துணை உங்களுக்கு இருக்கும். எதிர்த்து போராடும் தைரியம் மட்டும் இன்று கொஞ்சம் தேவை அவ்வளவுதான்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் கவனமாக நடந்து கொள்வீர்கள். அலட்சியமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டீர்கள். பொறுப்புணர்வு உங்களுக்கு அதிகமாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய நலன் பெரியவர்களுடைய நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வீர்கள். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் இருக்கும். தேவையற்ற டென்ஷன் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் தீர்வு தர கடவுள் உங்களுக்கு மனித ரூபத்தில் வந்து உதவி செய்வார். உறவினர்களின் ஆதரவு நண்பர்களின் ஆதரவால் நிறைய நன்மையை பெறுவீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று லேசான மன குழப்பம் இருக்கும். ஆகவே வேலையில் உஷாராக இருந்து கொள்ளுங்கள். நேரம் வீணாக வாய்ப்புகள் இருக்கிறது. நேரத்தை வீணடிக்காமல் கடமைகளை முடித்து விட்டால், பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். யாராவது உங்களுடைய மனதை திசை திருப்ப நினைத்தால் ஜாக்கிரதையாக இருங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம், நிறைய நல்ல விஷயங்களை கொண்டு வந்து உங்கள் கையில் கொடுக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் பணம் செலவாகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் ஆர்வம் காட்டுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த இரண்டு பாடல்களை கேளுங்கள். உங்களுக்குள் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் சுப செலவுகளை ஏற்படுத்தும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பொறுமை தேவை. பார்ட்னரோடு சண்டை போட வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுங்கள். எல்லா வேலையையும் கடைசி நேரம் வரை எடுத்துச் செல்ல வேண்டாம். நண்பர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குகளை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும். லாபம் பெறுக கூடிய நாளாக இருக்கும். சேமிப்பை உயர்த்தலாம். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் மேனேஜரை அனுசரணையாக பேச வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனக்குழப்பம் இருக்கும். எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சிவபெருமானை கும்பிடுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி புறம் பேசவே கூடாது. கவனம் தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். சாதனை படைக்கும் அளவுக்கு உங்களுடைய வேலை சிறப்பாக அமையும். கலைஞர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்பவர்களுக்கு குடிசைத் தொழிலாளிகளுக்கு எல்லாம் இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும். மேல் அதிகாரிகளோடு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கடன் சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சும் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
Previous Post Next Post


Put your ad code here