மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நலமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக முடியும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் ஒரு நார்மலான வாழ்க்கை உங்களுக்கு இருக்கும். பெரிய அளவில் லாபமும் இருக்காது. பெரிய அளவில் நஷ்டமும் இருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்றைய நாளை கொஞ்சம் மந்தமாக கழிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுறுசுறுப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லா வேலையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். இருந்தாலும் உங்களை நீங்கள் ஊக்குவித்துக் கொண்டு, இன்றைக்கான வேலையை இன்றே முடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையை அடுத்தவர்கள் தலையில் கட்ட வேண்டாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். கணவன் மனைவிக்கு ஒற்றுமை அதிகரிக்க கூடிய நாள். காதல் வெளியாக கூடிய நாள். சுபகாரியங்கள் நடக்கக்கூடிய நாள். வேலை வியாபாரம் எல்லாமும் நீங்கள் நினைத்தபடி நன்றாக நடக்கும். உங்களுடைய கனவு நினைவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். காலையில் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து இந்த நாளை துவங்க வேண்டும். கடன் வாங்கக் கூடாது. குறிப்பாக அதிக வட்டிக்கு இன்று கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். கொஞ்சம் சுபச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளோடு நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையை பொருத்தவரை பொறுமை தேவை. வியாபாரத்தை பொருத்தவரை சுறுசுறுப்பு தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும். பிரமோஷன் தேடி வரும். வருமான உயர்வு தேடி வரும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஒரு படி உயர்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் இது முடியாது. எனக்கு இது தெரியாது என்ற வார்த்தையை இன்று பயன்படுத்த வேண்டாம். எதுவாக இருந்தாலும் ஒரு கை முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். பண பற்றாக்குறை நீங்கும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப கடவுள் உங்களுக்கு செல்வ வளத்தை கொடுக்கப் போகின்றான். பிள்ளைகளுடைய முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீட்டிற்கு பொன் பொருள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலை வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். ஒருவரை பற்றி பின்னாடி வசைப்பாடாதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நண்பர்கள் புதிய உறவுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். சுபகாரிய தடைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது உங்களைத் தேடி வரும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உருப்படியாக ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று போராடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இருந்தாலும் சில இடங்களில், உங்களுடைய முயற்சிகள் சின்ன தடுமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. விடாமுயற்சி நிச்சயம் விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். அந்த தடங்களை சரி செய்ய சாமியை சரணாகரி அடையுங்கள். சரியாயிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, லட்ச ரூபாயாக இருந்தாலும் சரி பணம் பணம் தான். என்பதை நீங்கள் உணர வேண்டும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக விலை கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்காதீங்க நிச்சயம் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan