இன்றைய ராசிபலன் - 12.06.2025..!!!

 


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் ஏட்டிக்கு போட்டி சண்டை வரும். சக ஊழியர்களோடு கவனமாக பழக வேண்டும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய நண்பர்களோடு, உங்கள் வீட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேலை வியாபாரம் இவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் பொறுப்புகள் உங்கள் கையை வந்து சேரும். சில பேருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு இடமாற்றத்தோடு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மனஸ்தாபம் நீங்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். மேல் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சோம்பேறித்தனம் விலகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கரை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கடன் சுமை குறையும். வருமானம் இரட்டிப்பாகும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரோடு நெருங்கி பழக வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதுசாக பொன் பொருள் சேர்க்கை இருக்கும் .சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகளும் கைகூடி வரும். நண்பர்களால் நன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்க முயற்சி செய்கிறீர்கள். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்பாகவே செய்து முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளோடு பாராட்டும் கிடைக்கும். மாணவர்களுக்கு கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் கிடைக்கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீர்கள். பிரச்சனைகள் வருவதும் போவதுமாக இருக்கும். நண்பர்களோடு உறவுகளோடு வாக்குவாதம் வரும். இருந்தாலும் உங்களுடைய பொறுமை எல்லை மீறி போகாது. அமைதியாக இருந்தால் இத்தனை நல்லது நடக்குமா என்பதை நிறைய நல்ல அனுபவங்கள் இன்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நிதானதோடு இருந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையே தக்க வைத்துக் கொள்வது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். குறித்த நேரத்திற்கு, குறிபிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே உங்களுடைய பயணத்தை துவங்கி விடுங்கள். மீட்டிங் அப்பாயிண்ட்மெண்ட் இருந்தா நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். தாமதத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். கோபப்படக்கூடாது. தேவையற்ற வாக்குவாதம் கூடாது. நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருந்தால் மட்டுமே இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். பிடித்த பாடலைக் கேளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

Previous Post Next Post


Put your ad code here