இன்றைய ராசிபலன் - 13.06.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து வரக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகி, நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விரைய செலவுகள் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனைகள் இல்லை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நன்மைகள் நடக்கும். உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட, நண்பர்களாக மாறிவிடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். சுப செலவுகள் கொஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. சுபசெலவுக்காக சில பேர் கடன் வாங்குவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வகையில் வருமானம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். மற்றபடி நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டின் சுப காரியம் பேச்சுக்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரிடம் நெருங்கி பழக வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் அனாவசியமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சை மதிக்காமல் எதிராக செயல்படுவதற்காகவே ஒரு கூட்டம் உங்களை சுற்றி வளைக்கும். உங்களை வெறுப்பேற்ற தான். இருந்தாலும் உங்களுடைய பொறுமையை நீங்கள் இழக்கக்கூடாது. பொறுமையாக எதிரிகளை சமாளிக்கும் வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். கொஞ்சம் தந்திர வேலைகளை செய்தால் தான் இன்றைய நாள் ஓடும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரங்கள் செய்வது, அல்லது புதுசாக வியாபாரம் துவங்க இடம் பார்ப்பது இதுபோல நல்ல காரியங்களை இந்த துவங்கினால் லாபகரமாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். நிதிநிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய சுறுசுறுப்பு அடுத்தவர்களுக்கு எல்லாம் உதாரணமாக இருக்கும். குறித்த வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். குடும்பத்தில் அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான அமைதியான நாளாக இருக்கும். எவ்வளவுதான் வேலை சுமை இருந்தாலும், எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும் உங்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பு மட்டும் ஒருபோதும் குறையவே குறையாது. வேலையிலும் வியாபாரத்திலும் ரொம்பவும் அக்கறையோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய கடமை தவறாமல் இருப்பீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கப் போகிறது. நேரத்திற்கு வேலையை சரியாக முடிப்பீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக இருப்பீர்கள் சுப செலவுகள் உண்டு.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். யாரிடத்திலும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்காக போராடுவீர்கள். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக முடித்து தருவதில் திறமை உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். மேல் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here