மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு வேலையை தைரியமாக செய்து முடிக்க முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடுமாற்றம் ஏற்படும். மனது ஒரு நிலையாக இருக்காது. காலையிலேயே இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்யுங்கள். முடிந்தால் ஒரு கோவிலுக்கு சென்று விட்டு உங்கள் நாளை துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளுடைய ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரையில் நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. புது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் உங்களுடைய பேச்சாற்றல் இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் கூட ஐந்தே நிமிடத்தில் பேசி தீர்த்து வைத்து விடுவீர்கள். வசீகரத் தோற்றம், வசீகர பேச்சு உங்களுக்கு இன்று கை கொடுக்கும். இறைவனின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனமாக இருக்கவும். நிதிநிலைமை சீர்படும். கடன் சுமை குறையும். கௌரவம் கூடும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக இருப்பீர்கள். குழப்ப நிலையில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். உற்சாகமாக வேலை செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வேலையில் அக்கறை காட்டாமல், பொழுதுபோக்கில் உங்களுடைய ஆர்வம் திரும்பும். நேரம் அனாவசியமாக செலவாகும். பிறகு இந்த நாள் இறுதியில் பிரச்சனையில் போய் முட்டிக்கொண்டு நிற்பீர்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். பணத்தையும் வீணாக்காதீங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய அளவுக்கு வேலை பார்ப்பீர்கள். தவறு செய்த இடத்தில் உங்களை நீங்களே திருத்திக் கொள்வீர்கள். பெயர் புகழ் கூடக்கூடிய நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சில பேருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். குழப்ப நிலையில் அவசர நிலையில் எந்த ஒரு புது முடிவையும் எடுக்கக் கூடாது. முன்கோபம் வேண்டாம். மூன்றாவது நபருடைய பேச்சை முழுசாக நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொதுப்பணிகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரினத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்திலும் வேலையிலும் மனநிறைவு உண்டாகும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். இந்த நாள் வேலையை முழுசாக செய்து முடிக்க முடியாத சூழ்நிலை சிலபேருக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அளவான உணவை, ஆரோக்கியமான உணவை, சாப்பிடுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனமாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்கால சேமிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது தான் முக்கியம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.
Tags:
Rasi Palan