மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். இந்த வாரத்தின் முதல் வேலை நாள், உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல சுறுசுறுப்பு முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களோடு பழகும் போதும் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் முக்கியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். அவசர முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நல்லது நடக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். திடீர் பிரமோஷனுக்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் விளக்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையில் ஈடுபாட்டோடு நடந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களை யாரிடமும் அனாவசியமாக பேசாதீர்கள். இன்று பேசுவதை குறைத்து கொண்டால் பிரச்சனைகளும் நிச்சயம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராக கடன் வசூலாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வங்கி கடன் முயற்சி செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதற்கும் காலை வேலைகளை துவங்குவதற்கு முன்பு குலதெய்வத்தை ஒரு முறை மனதார நினைத்து வணங்குவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. வேலையில் அனுசரணை தேவை. சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நண்பர்களது உறவினர்களது உதவி கிடைக்கும். டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். கொஞ்சம் செலவுகள் உண்டாகும். சேமிப்பு கரையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மன தைரியத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன தோல்விகளை கண்டு துவண்டு போகக் கூடாது. மன தைரியத்தோடு செயல்பட்டால் எதிலும் வெற்றி காணலாம். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனத்தோடு இருக்க வேண்டும். அனாவசியமாக யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று அமைதியாக உங்களுடைய வேலைகளை பார்ப்பீர்கள். இந்த நாள் சாந்தமான நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறமை உங்களிடத்தில் இருக்கும். பெரியவர்களின் ஆசையும் கடவுளின் ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றத்தோடு காணப்படும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையில் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு திறமையாக சரி செய்து விடுவீர்கள். நல்லது நடக்கும் நாள். வியாபாரத்தை பொருத்தவரை உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. செலவை குறைத்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan