இன்றைய ராசிபலன் - 18.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். வேலையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை பொருத்தவரை சீரான முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் மனதில் நினைத்த நல்லது நிச்சயம் நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். சென்ற இடமெல்லாம் மரியாதை தேடி வரும். வேளையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அவமானத்திலிருந்து விடுபடக் கூடிய நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு நிம்மதியை தரும். பண பிரச்சனையை தீர்க்கும். குடும்பத்தில் இருந்து வந்து டென்ஷன் குறையும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சில பல சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் மன தைரியத்தை விடக்கூடாது. தைரியத்தோடு போராடுபவர்களுக்கு, நிச்சயம் இந்த நாள் இறுதியில் வெற்றி கிடைக்கும். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். சோதனைகள் வரும். ஆனால் நீங்கள் தோற்றுப் போக மாட்டீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். அந்ததந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். உங்களுடைய கடமைகளில் இருந்து தவற மாட்டீர்கள். பொய் சொல்ல மாட்டீர்கள். நேர் வழியில் நடந்து கொள்வீர்கள். இதனால் சின்ன சின்ன புது எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் உண்டாகும். உங்களுடைய பேச்சுக்கு சில இடங்களில் மரியாதை இருக்காது. தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள். அடுத்தவர்கள் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும்.

துலாம்


துலா ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். உங்களுடைய உடைமைகளை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். ஒரு வேலையை முழுசாக செய்வதற்கு கூட வாய்ப்புகள் அமையாது. இதனால் வாழ்க்கையில் சின்ன பின்னடைவு உண்டாகலாம். அதை கண்டு துவண்டு போகக்கூடாது. நிச்சயம் உங்களுக்கான நல்லதை கடவுள் காட்டிக் கொடுப்பார். குலதெய்வத்தை கும்பிடுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். அதுமட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைப்பீர்கள். இந்த நாள் இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சிரித்த முகத்தோடு இருப்பீர்கள். அழகும் வசீகரமும் கூடும். மனதிற்கு பிடித்த மணவாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபசலவர்கள் ஏற்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியே கொடுக்கும். புது வேலை தேடலாம். புதுசாக தொழில் துவங்க, பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். முதலீட்டிற்காக முயற்சி செய்யலாம். வேலை வியாபாரம் எல்லாம் உங்களுக்கு இன்று சுபம் தான். குடும்ப விஷயத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மனைவி குழந்தைகள் உடைய நேரத்தை செலவு செய்யும் மறக்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில பேருக்கு பதவி உயர்வுக்கான அடித்தளமும் இன்று போடலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். முன் கோபம் வேண்டாம். பணிவோடு நடந்து கொண்டால் நல்லது நிரந்தரமாக தங்கும்.
Previous Post Next Post


Put your ad code here