இன்றைய ராசிபலன் - 20.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமை தேவை. அனாவசியமாக யாரையும் எதிர்த்து பேசாதீர்கள். அனுசரித்து செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு வியாபாரத்தை விரிவுபடுத்த உதவி செய்யும். வேலையிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கையில் எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிக்காமல் ஓய மாட்டீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்குழப்பும் இருக்கும். உங்களுடைய மனது சுயநலமாக சிந்திக்கும். எந்த வேலையிலும் லாபம் பார்ப்பீர்கள். இதனாலையே சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சுயநலம் வேண்டாம். பொதுநலத்தோடு இன்று நடந்து கொள்வது நல்லது.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செல்லும் இடமெல்லாம் நல்ல மரியாதை கிடைக்கும். சமுதாயத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய மனிதர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறும். என்ஜாய் பண்ணுங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை மேலோங்கும் நாள். ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பதற்குள் நேரம் தான் வீணாகும். அந்த அளவுக்கு உங்களுடைய யோசனை இன்று நீண்டு கொண்டே இருக்கும். அனாவசியமாக அடுத்தவர்கள் மீது சந்தேகப்படாதீர்கள். அனாவசியமாக அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். வேலைகளை கொஞ்சம் முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டும். கடைசி நேரம் வரை எந்த வேலையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். சொன்ன நேரத்திற்கு வேலையை செய்து தர முடியாத சூழ்நிலை உண்டாகும் பார்த்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று நலமோடு இருப்பீர்கள். ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். வேலையில் ஆர்வத்தோடு இருப்பீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். லாபம் அதிகரிக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். நீங்கள் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் இன்று நல்லதொரு வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படும். வீட்டில் சுபகாரியத் தடை விலகும் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய வாழ்க்கைத் தரம் ஒரு படி மேலே உயரும். மன நிம்மதி கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here