மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டீர்கள். சிவனை கும்பிட்டு விட்டு இந்த நாளை துவங்குங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது வேலை, புது வியாபாரம் துவங்கலாம். இறைவனின் ஆசீர்வாதமும் பெரியவர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். சிவ சிவ சொல்லிவிட்டு இந்த நாளை துவங்குங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். ஸ்மார்ட்டாக வேலை செய்வீர்கள். உங்கள் வேலையை பார்த்து அடுத்தவர்கள் பொறாமைப்படுவார்கள். அந்த அளவுக்கு திறமை வெளிப்படும் நாள். வசீகர தோற்றமும் இருக்கும். இறை வழிபாடு செய்துவிட்டு, இந்த நாளை துவங்குங்கள். வெற்றி மேல் வெற்றி காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப காரியங்களை வீட்டில் துவங்கலாம். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இந்த வார துவக்கமே அதிரடியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் படு சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உங்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கும். இந்த நாள் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகரிக்கும். மேலதிகாரிகளுக்கு கைகட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று காதல் வெளிப்படும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கொஞ்சம் கண்ணும் கருத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களை முழுசாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய சவால்களின் ஜெயித்து காட்டுவீர்கள். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். நீங்களும் பெரிய மனிதர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். உங்களுடைய லட்சியம் நிறைவேற கூடிய நாளாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வார துவக்கத்திலேயே சில பல தோல்விகளை சந்திப்பீர்கள். இருந்தாலும் பயந்து சோர்ந்து உட்காரக் கூடாது. உங்களுடைய வேலைகளை அந்தந்த நேரத்திற்கு செய்து முடிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தியோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு இருக்க வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையற்ற பகைகளை வகுத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போதும் கூடுதல் கவனம் இருக்கட்டும். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவன குறைவு வேண்டாம்.
Tags:
Rasi Palan