மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை தேவையற்ற பிரச்சனைகள் தானாக விளக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதீத சக்தி இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். நன்மை நடக்கும் நாள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளுடைய தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விளக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். வேலையில் சரி வர கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எல்லா பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சிவ சிவ நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். அதிக யோசனை வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். செய்யவே முடியாத விஷயத்தை கூட உங்களுடைய திறமையால் இன்று செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். அளவுக்கு மீறிய சந்தோஷம் பிறக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். உற்சாகத்திற்கு இன்று அளவு இருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். அதிக கண்திருஷ்டி விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் என்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனாவசிய எதிர்ப்புகள் உண்டாகும். குழப்ப நிலையை ஏற்படுத்த நாலு பேர் உங்களை சுற்றி செயல்படுவார்கள். கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். கையில் எடுத்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பிரமோஷன் கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலைகளை சரிவர செய்ய மாட்டீர்கள். தேவையற்ற தாமதம், வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். இருந்தாலும் உங்களுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாது. கடமைகளில் இருந்து பின் வாங்க மாட்டீர்கள். அயராது உழைத்து உயர்வை பெறுவீர்கள்.
Tags:
Rasi Palan