மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகாமையில் வைத்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பஸ்ஸின் சாரதியும் உதவியாளர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news