கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்கிறாரா சல்மான் கான்?

 


விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குவார் என எதிர்பாக்கப்பட்டது. இவர் கமல்ஹாசனோடு இணைந்து விஸ்வரூபம் படத்தில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.

ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அதையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசன் அந்த படத்தில் தற்போது நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து மகேஷ் நாராயணன் தற்போது மம்மூட்டி மோகன்லாலை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கதை கமல்ஹாசனுக்காக மகேஷ் நாராயணன் எழுதிய கதை என்று சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது

Previous Post Next Post


Put your ad code here