இன்றைய ராசிபலன் - 04.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலை காரணமாக வியாபாரம் காரணமாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். வேலையும் வியாபாரமும் எப்போதும் போல சீரான போக்கில் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள். அவர்களுக்கான சேமிப்பையும் உயர்த்துவீர்கள் நல்லது நடக்கும் நாள் இன்று.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உயர் அதிகாரிகள் மேனேஜரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அக்கம் பக்கம் உறவுகளோடும் அனாவசியமாக வெறுப்பை காட்ட வேண்டாம். பொறுமையாக இருங்கள். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று தவறுகளை உணர்வீர்கள். சரி எது, தவறு எது, வாழ்க்கையினுடைய எதிர்காலத்திற்கு நன்மை செய்யக்கூடிய விஷயங்கள் எது, என்பதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களை குறை சொன்னது தவறு என்று உணர்ந்து மன்னிப்பும் கேட்பீர்கள். இந்த நாள் உங்களுக்கான புரிதல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவு பையை நிரப்பும். கடன் சுமைக்குறையும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கவனம் சிதறாமல் இருக்கும். நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை, எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சனை எல்லாம் சரியாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை பொது பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் இன்று கைநீட்டி கடன் வாங்காதீர்கள். கடன் வாங்கி செய்யக்கூடிய காரியங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மனநிறைவோடு உங்களுடைய நாளை துவங்குவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சக ஊழியர்களோடு உற்சாகமாக பழகுவீர்கள். இன்று குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று என்ஜாய் பண்ணவும் வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாள். வருமானம் உயரக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீங்களே எதிர்பார்க்காத ஏதோ ஒரு நல்லது நடக்கும். அந்த நல்லது உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள். கடவுள் உங்களுக்கு எதிர்காலத்திற்கு தேவையான நல்லதை இன்று கொண்டு வந்து கையில் சேர்க்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நீண்ட நாள் மன குழப்பத்தில் இருந்து வெளிவருவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையை உங்கள் பிரச்சினையாக நினைத்து பிரச்சனைக்கு உண்டான தீர்வையும் கொடுப்பீர்கள். மனதிருப்தியான நாளாக இந்த நாள் இருக்கப் போகிறது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுடைய வேலையும் வியாபாரத்தையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நன்மை நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here