இன்றைய ராசிபலன் - 05.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. மாணவர்களுடைய கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அவர்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக நடக்கும். சுப செலவுகள் உண்டு.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். அடுத்தவர்களுடைய பேச்சுக்கு செவி சாய்க்க மாட்டீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். இந்த நாள் இனிய நாள். இறை ஆசிர்வாதம் கிடைக்க கூடிய நாள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு புது முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கையை வந்து சேரும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். உங்களுடைய நீண்ட நாள் துயரங்கள் விடுபடும். உற்றார் உறவினர்களோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு பிடிக்காத வேலைகளை செய்ய மாட்டீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு பெயர் புகழ் அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். வேலையில்லும் வியாபாரத்திலும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் உபாதைகள் நீங்கும் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். முன்கோபத்தை குறைத்து உங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். வேகத்தை விட விவேகமாக செயல்படுவீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் கூடும். தொலைநோக்குப் பார்வை அதிகரிக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை இன்றே கணித்து விடுவீர்கள். இதெல்லாம் தப்பு நம் வாழ்க்கைக்கு உதவாது. இதெல்லாம் சரி நம் வாழ்க்கைக்கு உதவும் என்று அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவு எடுக்க இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரி தொல்லை விலகும் சந்தோஷம் பிறக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து, தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசிய பேச்சுக்கள் வேண்டாம். அடக்கத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாள்தான்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எதிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. பண பரிவர்த்தனையில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பாதீங்க. யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீங்க. இறை வழிபாடு செய்யுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வாழ்க்கை துணையோடு அன்யூனியம் ஏற்படும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களுடைய கடமையில் சரியாக நடந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பிள்ளைகளின் மீது இருந்து வந்து மனக்கசப்பு நீங்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.
Previous Post Next Post


Put your ad code here