மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பீர்கள். இழந்த சொத்துக்கள், நகைகளை மீட்டு எடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இந்த நாள் இனிய நாளாக அமையும். இன்று அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் அதிகமாக இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். பெரிய அளவிலான பிரச்சனைகளை கூட மிக மிக சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். திறமையும் வெளிப்படும். நல்ல பெயரும் கிடைக்கும். சோம்பேறி தனம் ஒரு துளியும் இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். ஏதோ ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்த்து ஆவலாக காத்துக் கொண்டிருப்பீர்கள். மனதிற்கு இதமாக இருக்கும். மனதிற்கு பிடித்த உணவு, மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபசலவர்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல பெயர் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் அதையெல்லாம் நேரத்திற்கு முடித்துவிட்டு, அமைதியாக ஓய்வு எடுக்க நேரமும் கிடைக்கும். உறவுகளோடு நல்லிணக்கம் உண்டாகும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மறதி உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு எல்லா வேலையும் செய்வீர்கள். கையில் எடுத்த வேலையை முடிக்காமல் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் பேச்சு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் துணிச்சலும் தைரியமும் வெளிப்படும். மேல் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் முகத்திற்கு நேரே சரியான பதில் கிடைக்கும். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று அமைதி காக்க வேண்டும். தேவையற்ற பகைமை வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லா விஷயத்திலும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். யார் என்ன பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு, பரிசு காத்துக் கொண்டிருக்கிறது. மனதிற்கு இதமான சூழல் அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் கனவு நினைவாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிரியின் தொல்லை இருக்கும். இந்த நாளில் வரும் சங்கடங்களை தவிர்க்க குலதெய்வத்தை கும்பிடுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். உங்களுடைய கடன் பிரச்சனையை சரி செய்து கொள்வீர்கள். நிம்மதியை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். குடும்பத்தோடு அதிக நேரம் செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த நாள் இனிய நாள்.
Tags:
Rasi Palan