மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெரிசாக எந்த அலைச்சலும் இருக்காது. உங்களுடைய வேலைகளில் எல்லாம் சரியாக, சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். கட்டுமான தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும் நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடப்பதற்கு உண்டா அத்தனை சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். உடல் சோர்வு காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கையை வந்து சேராது. சின்ன சின்ன கடன் பிரச்சனை இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் புது முதலீடுகளை செய்யலாம். நன்மைகள் நிறைய நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரிடத்திலும் கவனமாக பேசி பழக வேண்டும். வேலையில் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபத்தை கை நிறைய எடுப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சொல்வது அடுத்தவர்களுக்கு புரியாது. அடுத்தவர்கள் சொல்வதை உங்களால் கேட்க முடியாது. சில பல சங்கடமான சூழலில் சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நாளை கவனமாக நடத்திச் செல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். முகம் வசீகரத்தோடு காணப்படும். பேச்சில் திறமை வெளிப்படும். முடிக்க முடியாத பெரிய பெரிய விஷயங்களை, பேசிப் பேசி சுலபமாக நடத்தி முடித்து விடுவீர்கள். காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானத்தோடு நடக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி புறம் பேசாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் அதிகமாக தேவைப்படும். சின்ன சின்ன தோல்விகள் வரும்போது, துவண்டு போகக்கூடாது. எதிலும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஓய்வு தேவைப்படும். உடல் அசதி இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று சிந்திப்பீர்கள். வேலைக்கும் வியாபாரத்திற்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தவறு கிடையாது. ஆரோக்கியத்தில் அலட்சியமாக விடாதீங்க. ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெற்றிவாகை சூட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வீர்கள். தேவையற்ற நண்பர்கள் உங்களை விட்டு தானாக விலகி விடுவார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் உங்களுடைய பெயரும் புகழும் உயர்ந்து நிற்கும்.
Tags:
Rasi Palan