இன்றைய ராசிபலன் - 12.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு சிந்தனை உங்களுடைய வேலையை கெடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கவனத்தை சிதறடிக்க வேண்டாம். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். இறைவனை முழுமையாக நம்புங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய திறமை வெளிபடும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை அடையலாம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். குடும்ப சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் அனாவசியமாக பொய் சொல்ல வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று இனிமையாக பேசுவீர்கள். உங்களுடன் பழகுபவர்களுக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கும். உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும், பேச்சு திறமையும் வெளிப்படும் நாள். நினைத்த காரியத்தை சாதிக்கக் கூடிய நாள். இறை வழிபாட்டின் மூலம் மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை அதிகமாக இருக்கும். எப்படியாவது பெரிய லாபத்தை பெற வேண்டும் என்று கொஞ்சம் அகல கால் வைப்பீர்கள். ஆனால் அது சரியாக இருக்காது. இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அடுத்தவர்களைப் பார்த்து உங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாக இருப்பது தான் நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய பெருமையை ஊரே பேசும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாழ்நாள் கனவு நினைவாக கூடிய நாள் இன்று.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். பெற்றவர்களுடைய மனது சந்தோஷப்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்து வந்த தடை விலகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. பணவரவு சீராக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். இரவு நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபட கூடிய நாள் இன்று.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று இரக்க குணத்தோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நன்றாக நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன கஷ்டம் இருக்கும். அடுத்தவர்கள் உங்களுடைய மனது புண்படும்படி பேசலாம், அல்லது சொந்த பந்தங்களுக்குள் சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். மூன்றாவது நபர்களுடைய பிரச்சனையில் தலையிடாதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை ஏற்றத்தாழ்வோடு காணப்படும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். மற்றபடி வேலை வியாபாரத்தில் எல்லாம் உங்களுடைய திறமை வெளிப்படும் நாள்.
Previous Post Next Post


Put your ad code here