இன்றைய ராசிபலன் - 17.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எந்த விஷயத்தையும் அலட்சியமாக செய்யக்கூடாது. அடுத்தவர்களுடைய பேச்சை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கும். பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான போக்கே நிலவும். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டு.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பேராசை வரும். அடுத்தவர்களைப் போல நாமும் பணக்காரர்களாக வாழ வேண்டும் என்ற ஆசையில் சில குறுக்கு வழிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளது. எந்த பிரச்சனை வந்தாலும், எவ்வளவு சோதனை வந்தாலும் பொய் சொல்லாதீங்க. நீதி நியாயத்தைத் தாண்டி எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உயர் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. குடும்பத்தில் வாக்குவாதம் செய்யக்கூடாது. விட்டுக்கொடுத்து நடக்கவும். மனதை அமைதியாக வையுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யலாம். பிடித்த பாடலை கேட்கலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

கன்னி


ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நீங்கள் உண்டு உங்கள் கடமை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் வேலையில் தலையிட மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கே நிலவும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். வேலைகள் இழுபறியாக செல்ல வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன தடைகளும் தடங்கல்களும் வந்து போகும். ஆரோக்கியத்திலும் பிரச்சினை வரலாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்களை சிந்தித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். தேவையற்ற எதிர்ப்புகளை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது. பகை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. எதிரி தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் சரி வியாபாரத்திலும் சரி அனுசரணை தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் கைநிறைய கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து உங்களை சந்தோஷப்படுத்திவிடும். நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தங்க நகை வாங்கும் அதிர்ஷ்டம் வரலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்விக சொத்து உங்கள் கையை வந்து சேரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களுக்கு பிடித்த வேலைகளை சந்தோஷமாக செய்து முடிப்பீர்கள். பிடிக்காத வேலைகள் செய்வதையும் தவிர்ப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையில் இருந்த சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு வெற்றியைக் கொடுக்கும். இன்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் பயமும் இல்லாமல் வேலைகளை துவங்கலாம்.
Previous Post Next Post


Put your ad code here