மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமை வெளிப்படும். வேலையின் பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டாலும், அதை கண்டு துவண்டு போகக் கூடாது. வெற்றியின் பாதையை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். உங்கள் மனதிற்கு சரி என்று படக்கூடிய விஷயத்தை மட்டும் இன்று செய்தால் போதும். மன சஞ்சலத்தோடு எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் காட்டாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். பெருமையாக உங்களுடைய புகழை நீங்கள் பேசலாம். அதற்கு எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு. உங்களுடைய உழைப்புக்கான பலனை இன்று நீங்கள் உணருவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் தலைதூக்க வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகளோடும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, வியாபாரம் செய்யும் இடத்திலும் சரி, கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக யாரிடமும் பேசாதீர்கள். மூன்றாவது நபர்களை பற்றி குறை கூறாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நன்மை நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். எந்த கோபத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டும் என்று கூட உங்களுக்கு தெரியாது. கோபம் கண்ணை மறைத்து விடும். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நல்ல விஷயங்கள், நல்ல நண்பர்களை இழக்க வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்த இறை வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நகை கையை வந்து சேரும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். திருமணம் கைகூடி வரும். நீங்கள் நினைத்துப் பார்க்காத நல்லதை கடவுள் உங்களுக்கு செய்யப் போகிறார். என்ஜாய் பண்ணுங்க. கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய இடையூறுகள் வரும். ஒரு வேலையை முழுசாக செய்ய முடியாது. உடல் சோர்வு இருக்கும். இத்தனை சோதனைகளையும் கொடுத்த இறைவன், இந்த நாள் இறுதியில் உங்களுக்கு சாதனை படைக்கவும் ஒரு வாய்ப்பை கொடுப்பான். ஆகவே பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல், உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள். நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உருப்படியாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று போராடுவீர்கள். அந்தப் போராட்டத்தில் வெற்றியும் காண்பீர்கள். நிறைய நல்ல அனுபவ அறிவு கிடைக்கும். அனுபவசாலிகளின் நட்பு கிடைக்கும். இருள் சூழ்ந்த வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு காத்துக் கொண்டிருக்கிறது. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாள். நீண்ட நாள் கழித்து இன்று ஓய்வு எடுக்கவும் நேரம் கிடைக்கும். அலுவலகப் பிரச்சனை சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். உணவு விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. வண்டி வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
Tags:
Rasi Palan