மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மிகவும் திறமைசாலியாக செயல்படுவீர்கள். பெரிய அளவில் சாதனை படைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு காணப்படும். மன சோர்வும் இருக்கும். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. கொஞ்சம் ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்குங்கள். வேலையில் வியாபாரத்தையும் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆரோக்கியம் மிக மிக அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்திலிருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
சிங்கம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வம்பு வழக்குகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. கைநழுவி போன நல்லது தானாக உங்களைத் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நேர்த்திக்கடன் செலுத்துவதில் இருந்து வந்த தடைகள் விலகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் காணப்படும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். ஏதோ பழைய நினைவுகளை நினைத்து இன்றைய நாள் நகர்ந்து செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. இருந்தாலும் முக்கியமான விஷயங்கள் செய்யும் போது கவனம் சிதற கூடாது ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். புரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்திலிருந்து வந்த குழப்பங்கள் விளக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி நிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். தேவையற்ற வம்பு வழக்குகளுக்கு செல்லாதீர்கள். அமைதியாக இருங்கள். பொறுமையாக இருந்தால் இன்று வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Tags:
Rasi Palan