இந்த 4 ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட அதிக IQ கொண்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?


ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்களும், திறமைகளும் இருக்கும். அனைவருக்குமே குறிப்பிட்ட அளவு புத்திக்கூர்மை இருக்குமென்றாலும் சில ராசிக்காரர்கள் விதிவிலக்கான புத்திசாலித்தனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் IQ மற்ற ராசிக்காரர்களை விட அதிகமானதாக இருக்கும்.

இந்த புத்திசாலி ராசிகள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் தேவைப்படும் போது மட்டுமே தங்கள் புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை எளிதில் சாதித்துக் காட்டுவார்கள். இவர்களின் IQ இவர்களை எப்போதும் தனித்துவமானவர்களாக உலகிற்கு காட்டும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட அதிக IQ கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


கன்னி

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, மனப்பாடம் செய்வது மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று வரும்போது, கன்னி ராசிக்காரர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அடிப்படையான அணுகுமுறைகள் மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் ஆளுமை மற்றவர்களை விட அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.

அவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் புத்திக்கூர்மையுடன் அணுகுகிறார்கள் மற்றும் பெரும்பாலும் மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தகவல்தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படும் கன்னி, வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும், நன்கு படித்தவராகவும், கற்றலில் தீவிரமாகவும் இருப்பார்கள்.

மிதுனம்

இரட்டை ஆளுமை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தங்கள் அனைத்து வேலைகளையும் புத்திசாலித்தனம் மூலம் செய்வதற்க்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் புதிய விஷயங்களை விரைவாக மற்றும் திறமையாக கற்றுக்கொள்வார்கள், மேலும் முக்கிய செயல்முறையை தீவிரமாகப் புரிந்துகொள்வார்கள். அறிவாற்றலின் கிரகமான புதனால் ஆளப்படுவதால், அவர்கள் ஒளியின் வேகத்தில் அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக் கொள்வார்கள்.



மிதுன ராசிக்காரர்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள், ஒரே சூழ்நிலையை பல கோணங்களில் பார்க்கும் திறன் கொண்டவர்கள், இது அதிக IQ கொண்ட ஆளுமையின் முக்கிய பண்பாகும். அவர்கள் எப்போதும் கற்றுக்கொள்ளவும், வாழ்க்கையில் வேகமாக முன்னேறவும் விரும்புகிறார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மனதளவில் ஒரு தத்துவஞானியாக இருப்பார்கள். அவர்களின் அதிக IQ க்கு பங்களிப்பது அவர்களின் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மீதான ஆர்வமாகும். இந்த நெருப்பு ராசிக்காரர்கள் வழக்கமான வழிமுறைகள், சோர்வான கண்ணோட்டங்கள் அல்லது வழக்கமான நம்பிக்கைகளை பின்பற்ற விரும்புவதில்லை.


வெவ்வேறு வாழ்க்கை முறைகள், கல்வி நோக்கங்கள் மற்றும் வேடிக்கையான கற்றல் வாய்ப்புகளுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அவர்களின் விருப்பம், உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பற்றிய முழுமையான புரிதலை அவர்களுக்குக் கொண்டுவருகிறது. அவர்களின் அதிக IQ அவர்களை மற்றவர்களை விதிவிலக்கான புத்திசாலிகளாக மாற்றுகிறது.

மீனம்

இரக்கமும், பச்சாதாபமும் கொண்ட மீன ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். உலகின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த ராசியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக IQ கொண்ட இவர்கள் தங்கள் படைப்பாற்றல், திறந்த மனப்பான்மை மற்றும் புதுமையான சிக்கல் தீர்க்கும் திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

மீன ராசிக்காரர்கள் தனி உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இயல்பாகவே ஆர்வத்தையும், உண்மையை வெளிக்கொணர ஆழமாக தோண்டுவதையும் விரும்புகிறார்கள். இது அவர்களை சிறந்த துப்பறியும் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உளவியலாளர்களாக மாற்றுகிறது.
Previous Post Next Post


Put your ad code here