அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தமது வரி திருத்தம் குறித்து எழுதிய கடிதத்தில் anura kumara dissanayake என்பதற்கு பதிலாக aruna kumara dissanayake எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், தற்போது அதனை நிறுத்தி மீண்டும் கடிதமொன்றை டிரம்ப் அனுப்பியுள்ளார். அதில் anura kumara dissanayake என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற விருப்புவதாக குறித்த கடிதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 30 வீத வரியை டிரம்ப் விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news