யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள குடும்பப் பெண்..!!!



யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் வினோதா(வயது - 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்தநிலையில் உயிர்மாய்த்த பெண்ணிற்கு கடன் கொடுத்தவர்களால் தொல்லை ஏற்பட்டது.

கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here