மாணவியை கடத்தி சென்ற முகப்புத்தக காதலனுக்கு நேர்ந்த கதி..!!!


பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி ஹப்புத்தளை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடத்தி சென்று வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று(17) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, சந்தேக நபர், லிந்துலை, லோகி தோட்டத்தில் வசிக்கும் தலவாகலை பகுதியில் உள்ள ஒரு பிரபல தமிழ் பாடசாலையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளார்.

அத்துடன், முகப்புத்தகத்தின் ஊடாக மாணவியை தொடர்பு கொண்டு,அவருடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதனைதொடர்ந்து, சந்தேக நபர், 15 ஆம் நானுஓயா தொடருந்து நிலையத்தில் தன்னை சந்திக்குமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளதுடன், மாணவியும் தனது வீட்டிற்குத் தெரிவிக்காமல் அங்கு வந்தபோது, சந்தேக நபர் மாணவியை தொடருந்தில் ஹப்புத்தளைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாணவின் தந்தை லிந்துலை காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நிலையில், லிந்துலை காவல்துறையினர் மாணவியின் தொலைபேசி எண்ணை ஆராய்ந்து, அவர் ஹப்புத்தளை பகுதியில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, ஹப்புத்தளை பகுதிக்குச் சென்ற லிந்துலை காவல் நிலைய அதிகாரிகள் குழு, நேற்று (17) இரவு சந்தேக நபருடன் இருந்த மாணவியை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் மருத்துவரிடம் முற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here