வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை ; தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணை..!!!



குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இந்த குழந்தையின் தாய் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், குழந்தையின் தாயை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிரிவி கமராக்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here