யாழில். தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!!!


இன்று (19) காலை யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

வெளியே இருந்து வந்த நபர் ஒருவர் உள்ளே சென்று துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

துவிச்சக்கர வண்டியை திருடிச் செல்லும் நபர் தொடர்பாக தெரிந்தால் தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post


Put your ad code here