இன்றைய ராசிபலன் - 04.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியம் கூடாது. மூன்றாவது நபரை முழுமையாக நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. புது பாட்னர் சேர்க்கையின் போது கவனம் இருக்கட்டும். வண்டி வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். படு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் நஷ்டமான விஷயங்களை எப்படி லாபகரமாக மாற்றுவது என்று சாதுரியமாக சிந்திப்பீர்கள். நல்லது நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். உங்கள் மேல் விழுந்த வீண் பழியிலிருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பு இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். மனதில் இருந்த தேவையற்ற பயங்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியை தேடும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறைவனின் பரிபூரண ஆசியும் மன நிம்மதியும் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. நிம்மதியான இந்த நாளில் வேலையும் வியாபாரமும் கூட சுமூகமாக நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை தேடலாம். புதுசாக தொழில் துவங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை துவங்கலாம். இந்த நாள் எது செய்தாலும் அது உங்களுக்கு பல மடங்கு லாபத்தை கொடுக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நேரத்திற்கு சொன்ன வேலையை முடித்து தருவீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். உங்கள் நேர்மை உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து சேர்க்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வேலைகளை முடிப்பதோடு மட்டும் அல்லாமல், அடுத்தவர்களுடைய பிரச்சனையும் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். இதனால் சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பேருந்து ஷேர் ஆட்டோ இவைகளில் பயணம் செய்பவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொருட்கள் திருடு போக வாய்ப்புகள் உள்ளது. வேலையில் வியாபாரத்தையும் பெரிசாக எந்த டென்ஷனும் இருக்காது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். வாரத்தின் துவக்க நாள், சோர்வை துரத்தி அடிக்க என்ன வழி, என்று தேடி கண்டுபிடித்து விடுங்கள். இன்றைக்கான வேலையை ஒருபோதும் நாளை என்று தள்ளி போடக்கூடாது. கவனம் இருக்கட்டும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று ஊரே பேசப்போகிறது. லாபம் நிறைந்த நாள். சந்தோஷம் நிறைந்த நாள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். கடமையிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள். எதிரிகளை பந்தாடுவதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் இன்று எடுங்கள். உங்கள் கை ஓங்கி நிற்கும். நல்லது நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here