மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய பணம் வரக்கூடிய நாளாக இருக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் மகாலட்சுமி உங்களை வந்து சேருவாள். வந்த காசு பயனுள்ளபடி செலவாகும். சுப செலவுகள் உண்டாகும். மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான தீவையும் சொல்லிக் கொடுப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் நிறைய நல்ல பலன்களை அடைவீர்கள். ப்ரமோஷனுக்கும் முயற்சி செய்யலாம். சம்பள உயர்வு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்தோடு வேலை செய்ய வேண்டும். அடுத்தவர்களுடைய உதவியை எதிர்பார்க்காதீங்க. நீங்கள் உண்டு. உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். கவனத்தை சிதறடிக்கக் கூடாது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு உண்டாகும். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரிய தடைகள் விலகும் நாள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் பேச்சுக்களை இன்று துவங்குங்கள். நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சந்தோஷம் பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். பெயர் பாராட்டு புகழுக்கு நீங்கள் சொந்தக்காரராக மாறுவீர்கள். எந்த இடத்தில் எல்லாம் தலைக்குனிந்து நின்று அவமான பட்டீர்களோ, அந்த இடத்தில் உங்களுடைய கௌரவத்தை நிலை நாட்டுவீர்கள். மனநிறைவான நாள். சவாலில் ஜெயிக்க கூடிய நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனம் அதிகமாக தேவைப்படுகிறது. அலட்சியம் கூடாது. யாரிடமும் பொய் சொல்லக்கூடாது. சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நின்று நிதானமாக சிந்தித்து நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். டென்ஷன் குறையும். வியாபாரத்திலும் வேலையிலும் முழு கவனத்தோடு செயல்பட துவங்கி விடுவீர்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கமிஷன் தொழில் கைநிறைய பணத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது வேலைகளை இன்று ஆரம்பிக்காதீர்கள். இருக்கும் வேலையில் கவனம் செலுத்தினால் போதும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனுபவ சாலிகளுடைய பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் கையில் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். உங்களுடைய நற்குணங்களுக்கு எந்த ஒரு அவ பெயரும் வராது. கவலைப்படாமல் முயற்சிகளை மேற்கொள்ளலாம் அயராது உழையுங்கள் நல்லதே நடக்கும். இறை அருள் உங்களுக்கு இருக்கு.
மீனம்
மீன ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். தேவையில்லாமல் உங்களை திட்டிக் கொண்டிருந்த மேனேஜர் கூட சரியாக உங்களை புரிந்து கொள்வார். வேலையில் உங்களுக்கு சிக்கலை கொடுத்தவர்கள் எல்லாம் தானாக விலகி விடுவார்கள். மன நிம்மதி அடைவீர்கள். உங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறாதீர்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan