இன்றைய ராசிபலன் - 06.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் விட்ட இடத்தை பிடித்து விடுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உடல் சோர்வு மனசோர்வு மன குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். நன்மை நடக்கும் நாள். இறைவழிபாட்டில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். புது முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கப் போகிறீர்கள். பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்க மாட்டீர்கள். பிரச்சனைகளுக்கு சிந்தனையில் இடம் கொடுக்க மாட்டீர்கள். அதுவே இன்று உங்கள் அமைதிக்கு காரணம். வேலையில் எந்த இடையூறும் ஏற்படாது. கடவுளின் மீது பாரத்தை போட்டு இந்த நாளை துவங்குங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து தானாக உங்கள் வீடு தேடி வரும். பதவிகள் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்த நாள் நல்லதொரு வழிகாட்டியாக அமையப் போகிறது. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன நிம்மதி உண்டாகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் முதியவர்களுடைய ஆசையை கேட்டு பூர்த்தி செய்வீர்கள். மனது சந்தோஷம் அடையும். காதல் வெளிப்படும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மற்றபடி வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சை தொடங்கலாம். தடைபட்ட சுபகாரியங்கள் எல்லாம் நடப்பதற்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சுப செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. புது வேலை தேடுவது, புது வீடு தேடுவது இதுபோல சின்ன சின்ன நல்ல மாற்றத்திற்கு இன்று பிள்ளையார் சுழி போடலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை விட்டுவிட்டு அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமை படுவதற்கு நேரம் சரியாக இருக்கும். இதனால் உங்கள் வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை பற்றி சிந்திக்காதீங்க உங்களுடைய வேலையை மட்டும் பாருங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாள். வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும் ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த பந்தங்களோடு அனாவசியமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. மனைவி என்ன சொன்னாலும் சரி சரி, இன்று தலையாட்டிக் கொண்டால், கணவனுக்கு பிரச்சனை இல்லை. கணவர் என்ன சொன்னாலும் சரி, சரி என்ற தலை ஆட்டிக் கொண்டால் மனைவிக்கு பிரச்சனை இல்லை பார்த்துக்கோங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத சிக்கல்கள் உங்களைத் தேடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் கூடாது. யாரிடமும் பொய் சொல்லக்கூடாது. குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. நேர்மையாக இருக்கும் பட்சத்தில் வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை, இன்று நன்மை நடக்கும் நாள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணையோடு நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here