இன்றைய ராசிபலன் - 08.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை சீர்படும். அடமானத்தில் வைத்திருந்த நகை சொத்துக்களை மீட்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று அம்மன் வழிபாடு மன நிம்மதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அவமானப்பட்ட இடத்தில் உங்களுடைய பெயர் காப்பாற்றப்படும். சொன்ன வார்த்தை சரியாக நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீங்க. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள்.
பணம் சம்பவிஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்‌. மூன்றாவது நபரை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். நகைகளை அடமானம் வைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் அம்மன் வழிபாடு செய்வது இன்று சிறப்பான பலனை கொடுக்கும்.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலை பளுவும் அதிகமாக இருக்கும். உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்கு உழைப்புக்கேற்ற நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி கைநிறைய லாபத்தை சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் மனது ஈடுபடும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு வெளிப்படும் நாள். உறவுகளோடு நேரத்தை அதிகமாக செலவு செய்தீர்கள். பிரிந்த கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் மீது அதிகமாக அனுதாபப்படுவீர்கள். உதவி செய்வீர்கள். உங்களை நீங்களே பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இதனால் மிகப்பெரிய மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் விட்ட இடத்தை பிடிப்பீர்கள். சந்தோஷம் மீண்டும் உங்கள் கையில் வந்து சேரும். துன்பங்கள் நீண்ட தூரம் சென்றுவிடும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமை வெளிப்படும். புத்திசாலித்தனமாக வலம் வரப்போகிறீர்கள். உங்களை பார்ப்பவர்களுக்கு எல்லாம் பொறாமையாக இருக்கும். வேலாயிளும் வியாபாரத்திலும் படு சுறுசுறுப்பு இருப்பீங்க. பிரச்சினை கொடுத்து வந்தவர்களை எல்லாம் ஒரு கை பார்த்து விடுவீர்கள். மனதில் இருந்த வஞ்சத்தை எல்லாம் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்க போகுது. என்ஜாய் பண்ணுங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சிக்கலான பிரச்சனையில் இருந்து கூட சுலபமாக வெளிவருவீர்கள். உங்களுடைய அறிவாற்றல் வெளிப்படும் நாள். வேலையில் இருந்து வந்து தடைகள் நீங்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று காலையிலேயே அம்பாள் வணங்கிவிட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள். தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப கூடாது. வேலையில் மேலதிகாரிகளை எதிர்த்துப் பேசக்கூடாது. இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணம் கையை வந்து சேரும். நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை சொத்து சேர்க்கைக்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதியான நாள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலையில் உங்களுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிரமோஷனுக்கு கூட சில பேர் செலக்ட் ஆவீங்க. எவ்வளவு உழைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு என்று நன்மையை அடைவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு பேர் எவ்வளவு பிரச்சனை செய்தாலும் எல்லாவற்றையும் தூசு போல தட்டி விடுவீர்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here