மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் சுப காரியம் பேச்சுக்களை துவங்கலாம். தேவையில்லாத கடன் சுமை உங்களை விட்டு நீங்கும். நிதி நிலைமை சீராகும். இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சேமிப்பு கரைந்து போக வாய்ப்புகள் இருக்கிறது. தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்க வேண்டாம். முடிந்தவரை ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நினைத்த வேலைகள் நினைத்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். நீண்ட நாள் பகை விளக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். மன நிம்மதியை பெறுவீர்கள். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும். இதனால் வரை கஷ்டப்பட்டு செய்த வேலைக்கு உண்டான நல்ல பெயரை வாங்கி சந்தோஷம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்து தடைகள் நீங்கும்., கடன் வசூல் ஆகும். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளும் சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏமாற்றியவர்களே உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டு, ஏமாற்றிய பொருளை திருப்பிக் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். நல்ல தூக்கம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த டென்ஷனும் வராது. உங்களுடைய கடமைகளை சரியாக, சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் வரும். வேலையில் பின்னடைவு உண்டாகும். சோம்பேறித்தனம் ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பு நம்பிக்கை இருக்காது. இருந்தாலும் உங்களுடைய அன்றாட வேலைகளை செய்துதான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது. இறைவனின் மீது பாரத்தை போட்டு உங்கள் வேலையை பாருங்கள். மனதை அலைபாய விடாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் வரும். எதிரிகளால் தொல்லை வரும். ஒரு முடிவை எடுக்க முடியாத குழப்பத்தில் இருப்பீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபர் பேச்சை செவிகளில் போட்டுக் கொள்ளாதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற ஞாபகம் மறதியால் பிரச்சனைகள் வரும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை பல மடங்கு உயர வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுடைய நிதானம் மட்டும் தடுமாறாது. உங்களின் அமைதி, பணிவு உங்களை மேலும் மேலும் உயரத்தில் கொண்டு போய் அமரச் செய்யப் போகிறது. இன்று நல்ல அனுபவங்கள் கிடைக்க கூடிய நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு காணப்படுவீர்கள். உடல் அசதி ஏற்படும். சில பேருக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வளர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளை கண்டு கூட பெரிய அளவில் யோசனை செல்லும். ஆனால் கடவுள் உங்களோடு தான் துணையாக இருக்கிறார் என்பது கடைசி நிமிஷத்தில் புரியும். ஆகவே எதைக் கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan