மேஷம்
ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடன் சுமை குறையும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். வேலை தேடி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நேரம் வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்கக் கூடாது. புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடலாம். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள். வீண் வம்பு சண்டைக்கு செல்லாதீர்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதார்த்தமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் கூட அடுத்தவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக பேசுங்கள். வேலையிலும் வியாபாரத்தையும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். அனுபவசாலிகளின் அறிவுரையால் நிறைய நன்மைகளை அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்காக வங்கி கடன் முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். இதனால் மன நிம்மதி கிடைக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை செய்து கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க கூடாது. உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போதும் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். உங்களுடைய வேலைகளை நேரத்திற்கு முடித்துக் கொடுக்க முடியாது. யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்காதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகளை செய்யலாம். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன நல்லது வேண்டும் என்றாலும் இன்னைக்கு செய்யலாம் அது சக்சஸ் ஆகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து தானாக தேடி வரும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உங்கள் மீது விழுந்த பழியை விலக்கி விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல வேலைகளை மனதில் நினைத்தவுடன் உடனடியாக செய்து விடுவீர்கள். ஒன்றே செய். நன்றே செய். அதை இன்றே செய் என்ற வாக்கியம் இன்று உங்களுக்காக. நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும் பாத்துக்கோங்க.
Tags:
Rasi Palan