இன்றைய ராசிபலன் - 27.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியங்கள் எல்லாம் சுபமாக நடக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். இறை வழிபாடு மனநிறைவோடு நடைபெறும். குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த தடைகளும் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்ற தேவையற்ற குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களை மறந்து பிரச்சனைகள் உண்டாகும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் நல்ல வருமானம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல உண்டான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் இடையூறுகள் ஏற்பட்டாலும், உங்கள் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். உயர் இடத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கும் நாள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய, வங்கி கடன் முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். மேலதிகாரிகளின் ஆதரவு வேலையில் நிறைவாக கிடைக்கும். குடும்ப சண்டை சச்சரவுகள் சரியாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அயராது உழைப்பீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து ஒருபோதும் விலக மாட்டீர்கள். நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய நேர்மைக்கு உண்டான பாராட்டும் கிடைக்கும். உழைப்புக்கு உண்டான ஊதியமும் கிடைக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சி இருக்கும். வேலை சுமை அதிகமாக இருந்தாலும், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரோக்கிய குறைபாடுகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் கையில் எடுக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உங்கள் கையை வந்து சேரும். மன நிறைவு அடைவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வருமானம் குறைவாக காணப்படும். சேமிப்பு கரைவதற்கு உண்டான நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேண்டாத நட்பில் இருந்து விலகி இருங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலை வியாபாரம் இதிலிருந்து உங்களுக்கு ஓய்வு கிடைத்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகளிலிருந்து ஓய்வு கிடைக்காது. எதிரி தொல்லை, சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் என்று சின்ன சின்ன சஞ்சலங்களை இன்று எதிர்கொள்வீர்கள். பெரியதாக பாதிப்புகள் இல்லை.
Previous Post Next Post


Put your ad code here