இன்றைய ராசிபலன் - 28.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பாராட்டுகள் உங்களை வந்து சேரும். எட்ட முடியாத இலக்கை கூட சுலபமாக எட்டி விடுவீர்கள். பெயர் புகழ் எல்லாம் இன்று உங்களை சந்தோஷ கடலில் மூழ்கடிக்கும். இந்த நாளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத அளவு நன்மைகள் நடக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட் கேஸ் வழக்குகள் கூட உங்களுக்கு சாதகமாக அமையும். நிதி நிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்க வாய்ப்புகள் தானாக அமையும் நல்லது நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியாக இருக்க வேண்டும்‌. முன் கோபடக்கூடாது. தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது. தற்புகழ்ச்சி பேசக்கூடாது. அடக்கத்தோடு அமைதியாக இருந்தால், இந்த நாள் இனிய நாளாக அமையும் .

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய சேமிப்பு பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடக்கும். நல்ல சாப்பாடு மனதிற்கு நிறைவாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சிகளை செய்ய வேண்டாம். நேர்மையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய மன பயம் எந்த அளவிலும் பிரச்சனைகளை கொடுக்காது. சீக்கிரம் பணம் சம்பாதிக்க, சீக்கிரம் முன்னேற, எக்காரணத்தை கொண்டும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதிங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். பழைய விஷயங்களை நினைத்து நேரத்தை வீணடிப்பீர்கள். கடந்த காலம் மீண்டும் திரும்பாது. நிகழ்காலம் சந்தோஷத்தை கொடுக்கும். எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற உழைக்க வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கை நிறைய மகாலட்சுமி நிறைந்திருப்பாள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். நீண்ட தூர பயணங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களால் கவனம் செலுத்த முடியாது. கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மனம் சொல்லும். இன்றைய வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட நினைப்பீர்கள். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு இன்றைக்கான முக்கியமான வேலைகளை இன்றே முடித்து விடுங்கள். அதுதான் நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தெளிவோடு நடந்து கொள்வீர்கள். குழப்பமான பிரச்சனைகளுக்கு கூட சுலபமாக தீர்வை தரும் அளவுக்கு உங்களுடைய சிந்தனை இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நிதி நிலைமை சீராகும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று திறமைசாலியாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றம் மட்டும் அல்லாது, உங்களுடன் இருப்பவர்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றத்திற்கும் உதவி புரிவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்தில் இருந்து வந்து டென்ஷன் குறையும். கடன் சுமை தீரும். நிதி நிலைமை சீராகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்களை மீண்டும் துவங்கும். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். எதிலும் கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். குடும்ப உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here