முன்னாள் அமைச்சர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!!!


கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டிருந்தது.

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை முன்னிலைப்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன, உத்தரவிட்டிருந்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here