மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை சாந்தமாக பேசி தீர்க்கக் கூடிய அளவுக்கு, பொறுமை உங்களிடத்தில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவர்கள் கூட உங்களிடம் வந்து தானாக பேசுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். ஆனால் பிரச்சனைகளை சரி செய்ய நண்பர்களும் உறவுகளும் உறுதுணையாக நிற்பார்கள். மனதிற்கு ஆறுதல் கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கூடிய நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையற்ற பிரச்சனைகள் மனதை குழப்பும். வேலையும் வியாபாரத்திலும் இருக்கக்கூடிய ஆர்வத்தை குறைக்கும். கவனமாக இருக்க வேண்டிய நாள். அடுத்தவர்களை பற்றி சிந்திக்காதீர்கள். உங்களுடைய நலனுக்காக செயல்படுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏனோ இன்று மனது கவலையோடு இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வியாபாரத்தை கவனிக்க முடியாது. இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். மனதில் இருக்கும் குழப்பங்களை பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுக்கு இறைவனின் பரிபூரண அருள் இருக்கிறது. நிச்சயம் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பணம் உங்கள் கையை வந்து சேரும். நீங்கள் கேட்காமலேயே சில வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். அதிர்ஷ்ட காற்று வீசும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று, ஒரு ரூபாய், பத்து ரூபாயாக மாறக்கூடிய நாளாக இருக்கும். லாபம் நிறைந்த நாள். புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு கணக்குகளை துவங்கலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. இன்று மகாலட்சுமி அருள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டு மழை தான். சின்ன சின்ன வேலை செய்து பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேற, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வியாபாரத்திலிருந்து வந்த தடைகள் நீங்கும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று கைநிறைய லாபத்தை எடுப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பரிசு வரும். நீங்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்க வாய்ப்புகள் இருக்கிறது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. அன்றாட வேலைகளை அன்றாட முடித்தே ஆக வேண்டும் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீங்க. கைபேசியை அதிக நேரம் பார்க்காதீங்க. அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். பிள்ளைகள் விருப்பப்பட்ட சில பெரிய பெரிய விஷயங்களை கூட இன்று நீங்கள் செய்து கொடுப்பீர்கள். இது நம்மால் முடியாது என்று சில வேலைகள் எல்லாம் இருக்கும் அல்லவா. அதையெல்லாம் இன்று கையில் எடுங்கள். வெற்றி நிச்சயம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையில்லாமல், பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இழந்த கௌரவத்தை மீட்டெடுப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். உங்களுடைய உடைமைகளை மட்டும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
Tags:
Rasi Palan