இன்றைய ராசிபலன் - 04.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். மனதிற்கு பிடிக்காத விஷயங்கள் செய்வதை அறவே தவிர்த்து விடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப சண்டைகள் சரியாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைக்கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நேரத்தை அதிசயமாக வீணடிக்க கூடாது. நிறைய நேரம் கைபேசி பார்க்கக் கூடாது.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துடன் இருப்பீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இன்று வெற்றி கொடுக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மன நிறைவான நாள் இன்று.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு ஆர்வம் செலுத்த முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இரட்டிப்பு யோகம் வர வாய்ப்பு உள்ளது. ஏதாவது ஒரு பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நன்மைகள் நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. சுப காரியங்களை நாளை தள்ளிப் போடுங்கள். புது முயற்சிகள் எடுப்பதாக இருந்தாலும் நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று சந்தோஷமாக இந்த நாளை துவங்குவீர்கள். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். முன்கோபமே உங்களுக்கு இருக்காது. எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகளுடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத் தலைவன் தலைவிக்கு இன்று பொறுப்பு கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். பொறுப்புகளை நிறைவேற்றி மன நிம்மதி அடைவீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். கைவிட்டுப் போன நல்ல விஷயங்கள் எல்லாம் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகள் பெரிய அளவில் லாபத்தை ஈர்க்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும். நேரத்திற்கு உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். உங்களுடன் இருப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற்றி விட சில முயற்சிகளை எடுப்பீர்கள். பணத்தோடு சேர்த்து புண்ணியத்தையும் சேர்க்க கூடிய நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரி தொல்லை இருக்கும். உங்கள் முன்னேற்றத்தை கண்டு பொறாமைப் படுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் பேசாதீங்க. அமைதியாக இருங்கள். காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துடன் இருப்பது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here