மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொந்தரவுகள் கொஞ்சம் இருக்கும். போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன டென்ஷன் உண்டாக வாய்ப்பு உள்ளது, நேரத்தை வீணடிக்காதீங்க. நண்பர்களோடு சேர்ந்து எந்த பிரச்சனைக்கும் போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என்று, தவித்து வந்த விஷயங்களுக்கு எல்லாம் கூட இன்று ஒரு நல்லதொரு தீர்வு கிடைக்கும். பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். மன நிம்மதி கிடைக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நேர்வழியில் முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாக வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இன்று தேவையான அளவு ஓய்வு எடுப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஊன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் சுப செலவுகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கே நிலவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். உங்களுடைய உடைமைகளை மட்டும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சில பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் ஆதரவும் பெறுவீர்கள். சில பேருக்கு ப்ரோமோஷன், சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நாள் இனிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். தடைபட்டு வந்த வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மன நிறைவான நாள். இறைவழிபாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நேர்த்திக் கடனை செய்து முடிப்பீர்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது. புதிய முடிவுகள் எடுப்பதில், புது வேலைகள் தூங்குவது இது போல விஷயங்களை நாளை தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. கணவன் மனைவி அன்பு வெளிப்படும் நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்வான இடத்திற்கு செல்விர்கள். பிரமோஷன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற எதிரி தொல்லை நீங்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
Tags:
Rasi Palan