இன்றைய ராசிபலன் - 11.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை. பொறுமையாக இருந்தால் எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயத்தையும் சுலபமாக செய்து முடிக்கலாம். அவசரப்படும் பட்சத்தில் சிறு துரும்பை கூட உங்களால் நகர்த்தி போட முடியாது பார்த்துக்கோங்க. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன்பு, ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையில்லாத டென்ஷன் குறையும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்டெடுக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். உங்களை விட்டுப் போன பொருள் மீண்டும் உங்கள் கைக்கே வந்துவிடும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன சண்டை சச்சரவு வந்து போகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். யாருடைய பஞ்சாயத்திலும் தலையிடாதீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் நினைத்த வேலையை இன்று நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவுகளுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் மனநிம்மதியும் கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளையோ நண்பர்களையோ சந்திக்க வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். பெருசாக பாதிப்புகள் இல்லை.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டீர்கள். எந்த பிரச்சினையையும் ஒரு லாப கண்ணோட்டத்தோடு பார்ப்பீர்கள். இதனால் நல்ல மனிதர்களை இழக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை அலசி ஆராயாமல் யார் மீதும் பழி போடாதீங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மனது ஏதோ ஒரு சில நல்ல விஷயங்களை நினைத்துக் கொண்டே இருக்கும். பழைய விஷயங்களை எல்லாம் சிந்தித்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். ஏதோ காற்றில் பறப்பது போல ஒரு உணர்வு, நல்ல உணர்வாகத் தான் இருக்கும். இந்த நாளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூட எந்த தொந்தரவும் இருக்காது ‌

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மையே நடக்கும். உங்கள் மீது பொறாமை பட்டு உங்களோடு சண்டை போட்டு பிரிந்து சென்றவர்கள் கூட இன்று மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் பகை விலகும். உங்களை அறியாமலேயே ஆனந்த கண்ணீர் வரப்போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு இருங்கள் சந்தோஷத்தில் கடமையிலிருந்து தவறக்கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் அன்றாட வேலையை முடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் என்ன செய்வது. கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் வேலை என்று நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். இறைவனை நம்புங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று திறமைசாலியாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் வெளிப்படக்கூடிய நாள். உங்களுடைய பேச்சாற்றல் அதிகரிக்கும். யாராலும் செய்து முடிக்க முடியாத காரியத்தை சுலபமாக தந்திரமாக நீங்கள் செய்து முடிக்க போகிறீர்கள். கடவுளின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீங்க. பிரச்சனை தானாக தேடி வந்தால் கூட, ஒதுங்கி நிற்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
Previous Post Next Post


Put your ad code here