மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன சாந்தி கிடைக்கும் நாள். தேவையில்லாத எந்த பிரச்சனையும் உங்கள் மனதில் ஓடாது. உங்கள் மனது கோயிலாக மாறி இருக்கும். உங்கள் மனதில் பட்டதை பட் என்று செஞ்சிடுங்க. இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேலை வியாபாரம் குடும்பம் எல்லாம் இன்று சந்தோஷமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. எதிரிகளோடு பிரச்சனை செய்ய வேண்டாம். உறவுகளோடு அதிகமாக பேச வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதிநிலைமை சீராகும். பண பிரச்சனை தீரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மை அடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். மனதிற்கு ஆறுதலாக இருக்கும். தேவையற்ற கசப்பான சம்பவங்கள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் அக்கறை வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு நல்லதையும் உதாசீனப்படுத்தாதீர்கள். யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற ஒரு மன பதட்டம் இருக்கும். பதட்டத்தோடு எந்த ஒரு புது முயற்சியும் செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதிக நேரம் கைப்பேசி பார்க்காதீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலைக்குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கக்கூடிய நாள். இறைவழிபாட்டில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் வர வாய்ப்பு உள்ளது. உடல் உபாதைகள் ஏற்படும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சிலபல வேலையை நாளை தள்ளிப் போடுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று போராடி வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கும். கடவுள் உங்களுக்கு சில சோதையான காலகட்டங்களை கொடுக்கப் போகின்றார். எந்த சூழ்நிலை வந்தாலும் நேர்மை தவறாமல் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய நேர்மை உங்களை நிச்சயம் காப்பாற்றி விடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாக வெளிப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும் நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்ற நிறைய நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கட்டுமான தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபத்தை அதிகம் எடுப்பீர்கள். நீண்ட தூர பயணங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று யாராலும் செய்ய முடியாத வேலையை நீங்கள் செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக அக்கறை இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும் எல்லாவற்றையும் விட கடவுளின் அனுகிரகம் இன்று உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.
Tags:
Rasi Palan