மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு, உங்களுடைய திறமை வெளிப்படும். அடுத்தவர்களுடைய பொறாமை பார்வையும் உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கைநிறைய லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும் நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் இருக்கும் மருமகள் முதல், வேலைக்கு செல்லக்கூடிய மருமகள் வரை இன்று பாராட்டை பெற போகிறீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தை பொருத்தவரை பொறுமை தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களை வெல்ல யாராலும் முடியாது. யாராவது உங்களிடம் போட்டி போட வந்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். திறமை வெளிப்படும் நாள். அந்தஸ்து உயரம் நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தீராத சிக்கல்கள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரம் கூடாது. முன்கோபம் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் அதிரடி முடிவை எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாத விஷயத்தில் காலை வைக்கக்கூடாது. அமைதியாக இருங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வியாபாரத்தில் புதிய எதிரிகள் உண்டாகலாம். உறவுகளோடு வாக்குவாதம் வரும். கணவன் மனைவியோடு வாக்குவாதம் வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கை ஓங்கி நிற்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனை தீர்த்து வைக்கும் அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். எதிலும் தெளிவாக இருப்பீர்கள். குழப்பத்திற்கு இடம் இல்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரும். பெருசாக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். பெரிய அளவில் வந்த சண்டையை கூட பஞ்சாயத்து செய்து சுலபமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுக்கான மவுசு கூட போகிறது. நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு உங்களை பாராட்டுவார்கள். உங்கள் கையில் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று வேலை செய்வதற்கு தான் நேரம் பத்தாமல் போய்விடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த சொத்தை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாள் நல்ல நாளாக அமையும். இல்லை என்றால் தேவையில்லாமல் திட்டு வாங்குவீங்க, தேவையில்லாமல் வேலை பின்தங்கி நிற்கும். தேவையில்லாத டென்ஷன் கூடும் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலை வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எதிலும் தாமதம் இருக்காது. நீங்கள் மனதில் நினைத்த நல்ல காரியங்களை உடனடியாக செயல்படுத்தி காட்டுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.
Tags:
Rasi Palan