மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப தைரியமா இருப்பீங்க. துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் நினைத்ததை பட்டென்று வெளியில் பேசுவீர்கள். யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற துணிவு உங்களிடத்தில் இருக்கும். எதிரிகளை வறுத்து எடுத்து ஒரு சாதனை படைக்கப் போகிறீர்கள். நீண்ட நாள் கோழைத்தனம் நீங்கும் மன நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாடும் மன அமைதியை கொடுக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இல்லை சுமூகமான போக்கு நிலவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நண்பர்களோடு சேர்ந்து, நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்களை விளக்கி, முன்னேற நீங்கள் பாடுபடும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நிதானமாக இருப்பீர்கள். நிதானமாக சிந்திப்பீர்கள். உங்களுக்கு எது நன்மை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அது உங்களை தேடி வரும். விட்டுக் கொடுத்து நடக்கும் மனப்பக்குவம் உங்களை வாழ்க்கையில் மேன்மைப்படுத்தும். வேலையினும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் மற்ற நாட்களை விட இன்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் கஷ்டங்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்கால சேமிப்பிற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஆடம்பர செலவு வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதம் சண்டையில் ஈடுபடக்கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முன்பின் தெரியாத நபரை நம்பக் கூடாது. புதிய முதலீடுகளின் போது கட்டாயம் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். கூடுமானவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கை மீறி செலவுகள் செல்லும். ஷாப்பிங் போகாதீங்க. பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காதீங்க. கொஞ்சம் ஸ்டிட்டான பெற்றோர்களாக இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். கொடுத்த வாக்கை மீற மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான மரியாதை கூடும். அந்தஸ்து உயரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி அடைவீர்கள். மனைவி வழி உறவுகளின் மூலம் நன்மை நடக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். லேசான உடல் சோர்வும் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். உருப்படியாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். இதுநாள் வரை செய்யாத நல்ல வேலையை இன்று செய்வீர்கள். குறிப்பாக வாழ்க்கை துணைக்கு உதவியாக நிற்பீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அது எதிர்காலத்திற்கு நல்லது.
Tags:
Rasi Palan