மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கான பெயர் புகழ் அந்தஸ்து கூடும். பிரச்சனை செய்து வந்த மேலதிகாரிகள், உறவினர்கள் எல்லாம் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளுடைய தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் முதியவர்களின் நலனில் அக்கறை காட்டவும், குடும்பத்தோடு கொஞ்ச நேரத்தை செலவு செய்வது, சந்தோஷத்தை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். முன்கோபம் வேண்டாம். நிதானமாக இருக்கும் பட்சத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். தேவையில்லாத மன குழப்பங்கள் நீங்கும். தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று தவித்துக் கொண்டிருந்த உங்கள் மனதிற்கு, நல்லதொரு ஆறுதல் கிடைக்கும். நீங்கள் எடுத்த முடிவு நல்லது தான். இறைவன் உங்களுக்கு பக்க துணையாக இருப்பான். குழப்பிக் கொள்ள வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் நீங்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உங்களுடைய சந்தேக கண்ணோட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். இனி வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்க பிள்ளையார் சுழி போடுங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். சொன்ன வார்த்தை காப்பாற்றி தருவீர்கள். எந்த இடத்தில் எல்லாம் நீங்கள் அவமான பட்டீர்களோ, அதே இடத்தில் உங்களுக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கப் போகிறது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். எதிலும் அவசரம் வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளுடைய ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கும். சில இடங்களில் தாழ்ந்து போக வேண்டிய சூழ்நிலை வந்தாலும், தாழ்ந்து செல்லுங்கள். விட்டுக் கொடுத்தவர்கள் என்றும் கெட்டுப் போவது கிடையாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட கடவுள் நிறைய நல்லதை உங்களுக்கு கொட்டி கொடுக்கப் போகின்றான். வருமானம் கை நிறைய கிடைக்கும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செலவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கை கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். சுபசெலவுகள் ஏற்படும். வீட்டில் நீண்ட நாட்களாக பழுதான பொருட்களை எல்லாம் சரி செய்ய நல்ல காலம் பிறக்கும். வீட்டு பெண்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மனமகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நீண்ட நாள் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். சிக்கலில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் நிறைந்த நாள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனை தீரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நல்ல காரியங்களை துவங்கலாம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வேலையில் மேலதிகாரிகளுடைய அனுசரணை கிடைக்கும். பிரச்சினையாக இருந்த எதிரிகள் கூட உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
Tags:
Rasi Palan