இன்றைய ராசிபலன் - 23.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொருமை தேவை. உங்களுக்கான நல்லது நடக்கும். கொஞ்சம் தாமதமாக நடக்கும் அவ்வளவுதான். ஆகவே எந்த ஒரு வேலையையும் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுத்துங்கள். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தில் முன்பின் தெரியாமல் காலை வைக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் அந்த வேலையை கையில் எடுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முதலீட்டில் கவனம் தேவை. ஷாப்பிங் போகும்போது கவனம் தேவை. யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று நல்ல ஆதரவை பெறுவீர்கள். நீங்கள் எந்த ஒரு முடிவை ஒரு சபையில் சொன்னாலும் அதற்கு நாலு பேர் ஆதரவு தெரிவிப்பார்கள். உங்களுடைய பேச்சு எடுபடும். உங்களுக்கான மரியாதை கிடைக்கும். குறிப்பாக வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த அந்தஸ்தை பெற போகிறீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குழப்பங்கள் நீங்கும். வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீங்க. எதிர்காலத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை இன்று செய்யப் போகிறீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய பணம் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகலாம். நீண்ட நாட்களாக விற்காத சொத்து, வண்டி வாகனத்தை விற்கக் கூடிய வாய்ப்புகள் அமையலாம். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் கைக்கு மகாலட்சுமியே வந்து சேருவாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கடுகடுப்பான நாளாக இருக்கப் போகிறது. கொஞ்சம் கோபம், கொஞ்சம் டென்ஷன், வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தவும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வேகத்தோடு செயல்படக்கூடாது. விவேகத்தோடு செயல்பட வேண்டும். எல்லா விஷயத்திற்கும் அடம்பிடித்து ஒற்றை காலில் நிற்கக்கூடாது. பெரியவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதில் நல்லது இருக்கும் என்று அனுசரித்து செல்லுங்கள். வீம்பு பிடித்து நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு தான் நஷ்டம் அடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைகூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வெளியூர் பயணங்கள் உண்டாகும். சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கூடவே வேலையும் வியாபாரத்தையும் கவனமாக பார்க்க வேண்டும். பொறுப்புகளில் இருந்து தடுமாறக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். வேலையில் எதிரியாக இருந்தவர்கள், நண்பர்களாக மாறுவார்கள். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். காதல் வெளிப்படும். சுகமான நாளாக இருக்கும். புது அனுபவங்கள் கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பிடித்த வேலைகளை செய்வீர்கள். பிடிக்காத வேலை செய்வதை தவிர்ப்பீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சின்ன சின்ன எதிரிகள் வரலாம். ஆனால் உங்களுக்கான மன திருப்தி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்திருப்பீர்கள். இதனால் மன நிம்மதியும், இரவு நல்ல தூக்கமும் கிடைக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் திறமையாக சிந்திப்பீர்கள். பிரச்சனைகளை சமூகமாக முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் சந்தோஷம் இருக்கும்.
Previous Post Next Post


Put your ad code here