மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் பெருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் தேடி வர போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாள். பெருமையாக தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். எந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு அவமானம் நேர்ந்ததோ, அந்த இடத்தில் எல்லாம் பாராட்டுகள் கிடைக்கும். யாரெல்லாம் உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்றார்களோ அவர்களே வந்து மீண்டும் உங்களிடம் பேசுவார்கள். சக்சஸ் உங்கள் பக்கம்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாள். பல பேருடைய பார்வை உங்கள் மீது விழும். இந்த அடக்கம் உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை அதிகமாக இருக்கும். நிறைய நல்லது நடக்க வேண்டும் என்று, நிறைய குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பீர்கள். நிறைய பொய் சொல்வீர்கள். இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பேராசை வேண்டாம். குறுக்குப் பாதை வேண்டாம். கூடா நட்பில் இருந்து விலகி இருந்துக்கோங்க. நேர்மையாக நடக்கும் போது இந்த நாள் நிச்சயம் சுமூகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். பாராட்டுகள் வந்து சேரும். புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டலாம். எதிர்கால சேமிப்பை உயர்த்தலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். ஆமாங்க. அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய மனதில் போட்டி பொறாமைகள் வரும். இருக்கும் இடத்தை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவீர்கள். பேராசையால் சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் இன்று கைகூடி வரும். புது வேலைகளை துவங்கலாம். புதுசாக வேலைக்கு அப்ளிகேஷன் போடலாம். சொந்தமாக ஏதேனும் சொத்து வாங்குவதாக இருந்தால் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது. அன்றாட வேலையில் மட்டும் அக்கறை காட்டுங்கள். முக்கியமான விஷயங்களைப் பற்றி இன்று பேசாதீங்க. ஏதாவது வாக்குவாதம் சண்டை வந்தால் கூட அந்த இடத்தில் இருந்து ஒதுங்கி செல்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் வேண்டாம். நிதானம் தேவை. தேவையற்ற பகை உண்டாக வாய்ப்பு உள்ளது. ரொம்ப நெருக்கமானவர்கள் கூட உங்களை விட்டு விலகி செல்லலாம் பாத்துக்கோங்க. ரொம்ப பிடிச்சவங்க கிட்ட சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வதில் தவறு ஒன்றும் கிடையாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். மனதில் எந்த குழப்பமும் இருக்காது. தயக்கமும் இருக்காது. இறைவனின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறக்கூடிய நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாள். வேலையும் வியாபாரமும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செல்லும். புதிய முதலீடுகள் செய்யலாம். நிதிநிலைமை சீராக இருக்கும். வருமானம் பெருகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
Tags:
Rasi Palan