இன்றைய ராசிபலன் - 26.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இன்று பல நல்ல அனுபவங்கள் கிடைக்கப் போகிறது. இத்தனை நாள் செய்த தவறு என்ன, இனிமேல் என்ன தவறுகளை செய்யக்கூடாது என்று அனுபவ பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான அத்தனை நல்லதையும் கடவுள் உங்களுக்கு தரப்போறான் பயன்படுத்திக்கோங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு கேட்காமல்லேயே இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சந்தோஷத்தில் வேலையையும் வியாபாரத்தையும் பாக்காம விட்டுறாதீங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் செய்ய முடியாத நல்ல காரியங்களை இன்று செய்து மனநிறைவை அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்காது. அதற்காக துவண்டு போகக்கூடாது. துடிப்புடன் செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாச போராட்டம் ஒரு முடிவுக்கு வரும். நண்பர்களிடத்திலும் உறவுகள் இடத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கைநிறைய சம்பாதிப்பீர்கள். பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்த உங்களுக்கு கடவுள் நல்ல வழியை காட்டப் போகின்றான். ஏதோ ஒரு வகையில் உங்கள் பண கஷ்டத்தை தீர்க்க கடவுள் மனித ரூபத்தில் வந்து உதவப் போகின்றான். கவலை விடுபடும் நாள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரப்படக்கூடாது. முடிவுகள் எடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். அடம் பிடித்து எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாளாக இருக்கும். ஒரு பிரச்சனையில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திணறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத சிக்கல்கள் வரும். கடவுள், நீங்கள் தாங்கும் அளவுக்கு தான் பிரச்சனையை கொடுப்பான். ஆகவே பிரச்சனையை எதிர்த்துப் போராடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கோபத்தால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். நல்ல மனிதர்கள் நண்பர்களை இழக்க கூட வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்கும் பட்சத்தில் இழப்புகள் தவிர்க்கப்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலை வியாபாரம் எல்லாம் இன்று நல்லபடியாக செல்லும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விதாண்டா வாதம் பேசாதீர்கள். குறிப்பாக இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளோடு சண்டை போட வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷம் பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை சுமூகமான போக்கு நிலவும்.
Previous Post Next Post


Put your ad code here