மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பல நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். குடும்பத்தில் உங்களை புரியாமல் பிரச்சனை செய்து கொண்டிருந்த உறவுகள், உங்களோடு வந்து சேரும். கடன் சுமை தீரும். அடமானத்தில் வைத்த பொருள்களை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றி காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கலைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். பக்குவமான நாள். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடத்தில் ஆசிர்வாதம் கிடைக்கும் இறையருள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலைகளை சரியான நேரத்தில் செய்து கொடுக்க முடியாது. சின்ன பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு போகக்கூடிய பெண்கள் யாராக இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் அதிகப்படியான செலவாக வாய்ப்பு உள்ளது. சுப செலவு தான். கவலைப்படாதீங்க, இன்று எவ்வளவுக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்களோ, எதிர்காலத்தில் அவ்வளவு வரவு பெறுவீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. மனநிறைவோடு உங்களுடைய வேலையை பாருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. வேலை வியாபாரத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பேசுவதை நம்பி முழுமையாக ஏமாந்துறாதீங்க. சுயமாக சிந்தித்து செயல்படுங்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட முடிவை எடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெருகிர்கள். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகள் செய்யலாம். ஆனால் வாடிக்கையாளரையோ, பார்ட்னரையோ பகைத்துக் கொள்ளும் அளவுக்கு சண்டை எல்லாம் போட்டுடாதீங்க. பொறுமையா இருங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெருமையாக உங்களுடைய வெற்றியை வெளியில் சொல்லலாம். தலை நிமிர்ந்து நடக்கலாம். யாரெல்லாம் உங்களை பார்த்து ஏளனமாக பேசினார்களோ, அவர்கள் இடத்தில் கெத்து காட்டுங்க. தப்பே இல்லை. உங்களுடைய உழைப்பு உங்களுக்கான முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை இருக்கும். யோசித்து யோசித்து நேரத்தை வீணடிக்காதீங்க. வேலையில் கவனம் செலுத்துங்கள். முதலில் வேலை முடித்து விட்டால், பிறகு வரும் பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ளலாம். வேலையில் பின்தங்கி இருந்தால் எல்லாமே பிரச்சனை தான் பார்த்துக்கோங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புது வேலை தேடுவது, புதுசாக ஏதாவது கல்வி சார்ந்த விஷயங்கள் துவங்குவது, புது தொழில் துவங்குவது, இப்படிப்பட்ட விஷயங்களுக்கு பிள்ளையார் சுழி போடுங்க. சுபகாரியத்திற்கும் பிள்ளையார் சுழி போடலாம். இந்த நாள் உங்களுக்கான இனிய நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வரும். சில பல குழப்பங்கள் வரும். ஆனால் ஆதரவாக உங்களை சுற்றி நண்பர்களும் உறவினர்களும், நிற்பார்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் நாள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும். பிரச்சனையிலிருந்து விடுபட்டு இந்த நாள் இறுதியில் பெருமூச்சு விடுவீர்கள். நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கோவில்களுக்கு பிரயாணம் செய்வது, குடும்பத்தோடு வெளியில் செல்வது, இதுபோல நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan