இன்றைய ராசிபலன் - 30.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் இரட்டிப்பாக கூடிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் வரும். எதிரிகள் தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். பயணங்கள் இனிதே நிறைவடையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களை கை தூக்கி விட நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். குடும்ப நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். உங்களை தரை குறைவாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுடைய இந்த நாள் அமைதியான நாளாக செல்லும். எவ்வளவு பெரிய பூகம்பமே வெடித்தாலும் உங்களுடைய சாந்தம் ஒரு துளி அளவும் கலைந்து போகாது. மௌனம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கப் போகிறது. இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சேமிப்பு கரையும். செலவுகள் அதிகரிக்கும். யாரிடமாவது பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. முதலீட்டில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு, பாசம் சந்தோஷம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுப்பீர்கள். எந்த தடுமாற்றமும் இருக்காது. அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபட நாலு பேர் உதவியாக இருப்பார்கள். சிக்கல்களில் இருந்து விடுபட கூடிய நாள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் பெறுவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு பணம் கைநீட்டி வாங்காதீங்க. எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எடுப்பீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு நம்பர் ஒன் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒளிவு மறைவு வேண்டாம். பொய் சொல்லி பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன கவலை இருக்கும். சின்ன சின்ன வாக்குவாதம் வம்பு வழக்குகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். வேலை வியாபாரத்தில் அனுசரணை தேவை.
Previous Post Next Post


Put your ad code here